/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மலை ரயில் பாதையில் மண்சரிவு 6 நாட்களாக சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
/
மலை ரயில் பாதையில் மண்சரிவு 6 நாட்களாக சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
மலை ரயில் பாதையில் மண்சரிவு 6 நாட்களாக சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
மலை ரயில் பாதையில் மண்சரிவு 6 நாட்களாக சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
ADDED : அக் 23, 2025 10:44 PM

குன்னூர்: குன்னூர் - மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் 7 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. 6 நாட்களாக முன்பதிவு செய்த சுற்றுலா பயணிகள் ரயிலில் பயணம் செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.
நீலகிரி மாவட்டத்தில், பெய்த கன மழையால், குன்னூர் மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் பாறைகள் உருண்டு விழுந்ததுடன், மண் சரிவும் ஏற்பட்டதால் கடந்த 18ம் தேதி மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரயில் ரத்து செய்யப்பட்டது.
சீரமைப்பு பணிகள் தொடர்ந்து மேற்கொண்ட போதும், காட்டேரி, ரன்னிமேடு, ஹில் குரோவ் உட்பட 7 இடங்களில் பெரிய அளவில் மண்சரிவு ஏற்பட்டது.
நேற்று மேட்டுப்பாளையத்தில் இருந்து மூன்று பொக்லின் இயந்திரங்கள் தனி ரயிலில் கொண்டுவரப்பட்டு அகற்றும் பணிகள் நடந்தன.
மேட்டுப்பாளையம், குன்னூர் ரயில்வே பொதுப்பணித்துறை ஊழியர்கள் 25க்கும் மேற்பட்டோர் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர். மேட்டுப்பாளையம் ஊட்டி மலை ரயிலில் முன்பதிவு செய்த சுற்றுலா பயணிகள் கடந்த 6 நாட்களாக ஏமாற்றம் அடைந்து சென்றனர். ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், சீரமைப்பு பணிகள் முழுமை பெற்ற போதும், மழை பாதிப்பு இல்லாமல் இருந்தால் நாளை (இன்று) மலை ரயில் இயக்கப்படும், என்றனர். குன்னூர் ஊட்டி இடையே எந்த பாதிப்பும் இல்லாமல் உள்ளதால், இதில் சுற்றுலா பயணிகள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

