/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குன்னுாரில் சுற்றுலா பயணிகள் கூட்டம்
/
குன்னுாரில் சுற்றுலா பயணிகள் கூட்டம்
ADDED : மே 17, 2025 05:16 AM

குன்னுார்: குன்னுார் சிம்ஸ் பூங்காவில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து, களைகட்டி உள்ளது.
நீலகிரி மாவட்டத்தில், கோடை சீசன் களைகட்டி உள்ள நிலையில், ஊட்டி மலர் கண்காட்சிக்கு வரும், சுற்றுலா பயணிகள் பலரும், குன்னுார் சிம்ஸ் பூங்காவிற்கும் வந்து செல்கின்றனர்.
இதனால், குனனுார் சிம்ஸ் பூங்காவில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் வழக்கத்தை விட அதிகரித்து காணப்பட்டது.
நடப்பாண்டு அதிகபட்சமாக, சிம்ஸ்பூங்காவில், 5 லட்சம் மலர் நாற்றுக்கள் நடவு செய்து பராமரிக்கப்பட்டு வந்ததில், 'டேலியா, பிளாக்ஸ், டெல்பீனியம், ஆஸ்டர், சைக்ளமேன், லிசியான்தஸ் சால்வியா, ஆன்ட்ரினம், பால்சம், பெகோனியா, மேரிகோல்டு,' உள்ளிட்ட மலர் வகைகள் பூத்து குலுங்குகிறது.
இவற்றின் முன்பு சுற்றுலா பயணிகள் நின்று புகைப்படம் மற்றும் செல்பி எடுக்க அதிகமாகும் காட்டி வருகின்றனர். வரும், 23 முதல் 25ம் தேதி வரை 65வது பழக்கண்காட்சி நடத்தப்படுவதால், அதற்கான ஏற்பாடுகளை தோட்டக்கலை துறையினர் ஈடுபட்டுள்ளனர்.