/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
முதுமலையில் திரண்ட சுற்றுலா பயணிகள்; சவாரியின்போது புலியை கண்டு வியப்பு

ADDED : செப் 08, 2025 09:33 PM

கூடலுார்: ஓணம் பண்டிகை தொடர் விடுமுறை காரணமாக, முதுமலையில் குவிந்த சுற்றுலா பயணிகள், வனத்தில் புலியை கண்டு வியந்தனர்.
கேரளாவில் ஓணம் பண்டிகை முன்னிட்டு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டதால், கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, திரளான சுற்றுலா பயணிகள் நீலகிரியில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு அதிக அளவில் வருகை தந்தனர்.
அதில், முதுமலை புலிகள் காப்பகம் வந்த பல சுற்றுலா பயணிகள் வனப்பகுதிக்குள் சவாரி சென்றனர். அங்கு யானை, காட்டெருமை, மான்கள், கரடி உள்ளிட்ட வன உயிரினங்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். அதிர்ஷ்டவசமாக பலர் இரு புலிகளை பார்த்து 'போட்டோ' எடுத்து மகிழ்ந்தனர்.
மாலையில், தெப்பக்காடு யானைகள் முகாமில் குவிந்த பயணிகளுக்கு, 'யானைகளின் வாழ்வியல் முறை,' குறித்து வனத்துறையினர் விளக்கம் அளித்தனர். கூட்டம் அதிகரித்ததால், தெப்பக்காடு மைசூரு தேசிய நெடுஞ்சாலை, மசினகுடி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார், போக்குவரத்து சீரமைக்க கடும் சிரமப்பட்டனர்.