/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'பிளாஸ்டிக்' விழிப்புணர்வு சுற்றுலா பயணிகளிடம் இல்லை; வனவிலங்கு வார விழாவில் வருத்தம்
/
'பிளாஸ்டிக்' விழிப்புணர்வு சுற்றுலா பயணிகளிடம் இல்லை; வனவிலங்கு வார விழாவில் வருத்தம்
'பிளாஸ்டிக்' விழிப்புணர்வு சுற்றுலா பயணிகளிடம் இல்லை; வனவிலங்கு வார விழாவில் வருத்தம்
'பிளாஸ்டிக்' விழிப்புணர்வு சுற்றுலா பயணிகளிடம் இல்லை; வனவிலங்கு வார விழாவில் வருத்தம்
ADDED : அக் 07, 2025 08:56 PM

குன்னுார்; 'பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்த மாணவ, மாணவியரிடையே விழிப்புணர்வு அவசியம் தேவை,' என, வன உயிரின வார விழாவில் வலியுறுத்தப்பட்டது.
குன்னுார் அரசு மேல்நிலைப் பள்ளியில், வனத்துறை சார்பில் வன உயிரின வார விழா நடந்தது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியை டாப்னி மார்கிரேட் தலைமை வகித்தார்.
குன்னுார் வனச்சரகர் ரவீந்திரநாத் பேசுகையில்,''யானை உட்பட வனவிலங்குகள் இருக்கும் இடங்களில் வன வளங்கள் செழிப்பாக இருக்கும். மக்கள் தொகை பெருக்கம் போன்றே வனவிலங்குகளின் பெருக்கமும் அதிகரித்து வருகிறது. இதனால், தான் மனித-விலங்கு மோதல் நடந்து வருகிறது. வனவிலங்குகளை தொந்தரவு செய்யாமல் அதனை வாழ விட வேண்டும். யானை மீது கல் வீசி எறிவது, வேட்டையாடுவது தடுக்கப்படுவதால், வன விலங்குகளின் வாழ்வியல் சுழற்சி முறை சரியாக அமையும். மாணவ பருவத்திலேயே வனவிலங்குகளை பாதுகாப்பது குறித்து அறிய வேண்டும்,'' என்றார்.
வனவர் ராஜ்குமார் பேசுகையில்,''சிறப்பு உயிர் சுழல் மண்டலமாக நீலகிரி விளங்குகிறது. பல்லுயிர் சூழல் நன்றாக இருந்தால் மனித இனமும் நன்றாக வாழும். நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஆங்காங்கே வீசும் 'பிளாஸ்டிக்' காரணமாக வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. பிளாஸ்டிக் பயன்பாடுகளை கட்டுப்படுத்த, மாணவ, மாணவிகள் மத்தியில் விழிப்புணர்வு அவசியம் தேவை. துணிப்பை மற்றும் பேப்பர்களில் பொருட்களை வாங்குவதை ஊக்குவிக்க வேண்டும். பர்லியார் நெடுஞ்சாலை ஓரங்களில் சுற்றுலா பயணிகள் ஆங்காங்கே வீசி செல்கின்றனர்.
'எங்கு குப்பை தொட்டிகள் உள்ளதோ அங்கு கொண்டு சென்று இவற்றை கொட்ட வேண்டும்,' என்ற மனப்பான்மை பலரிடம் இல்லாமல் உள்ளது. இதனால், ஆங்காங்கே வீசும் உணவு கழிவுகளுடன் பிளாஸ்டிக் வீசுவதால், இவற்றை உட்கொள்ளும் வனவிலங்குகள் உயிரிழக்கும் சூழ்நிலையும் ஏற்படுகிறது. பிளாஸ்டிக் உட்பட உணவு கழிவுகளை ஆங்காங்கே வீசாமல் சுற்றுலா பயணிகள் வாகனங்களில் கொண்டு சென்று உரிய முறையில் அப்புறப்படுத்த வேண்டிய விழிப்புணர்வு அவசியம் தேவை,'' என்றார். பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.