/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சிம்ஸ் பூங்காவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரிப்பு
/
சிம்ஸ் பூங்காவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரிப்பு
சிம்ஸ் பூங்காவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரிப்பு
சிம்ஸ் பூங்காவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரிப்பு
ADDED : அக் 07, 2025 08:57 PM

குன்னுார்: நீலகிரியில் இரண்டாவது சீசன் துவங்கியுள்ள நிலையில், குன்னுார் சிம்ஸ் பூங்காவில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் ஏப்., மே மாதங்களில் கோடை சீசனை போன்று, அக்., நவ., மாதங்களில், 2வது சீசன் காலங்களில், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படும்.
இந்நிலையில், குன்னுார் சிம்ஸ் பூங்காவில் கடந்த ஜூலை மாதம் இரண்டாவது சீசனுக்காக, 1. 90 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டன. அதில், 'சால்வியா, டேலியா, பிளாக்ஸ், டெல்மீனியம், மேரி கோல்டு, பால்சம், டேலியா,' உட்பட பல்வேறு மலர்கள் பூத்து குலுங்குகிறது.
ஆயுத பூஜை விடுமுறை முடிந்த பிறகும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. குறிப்பாக கல்வி சுற்றுலாவாக வருகை தரும், கல்லுாரி மாணவ, மாணவிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது. அவ்வப்போது பெய்த மழையை தொடர்ந்து, மலர்களை பாதுகாக்கும் பணிகளில், தோட்டக்கலை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.