/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'கண்காணிப்பு பணியில் வனத்துறை சிறப்பாக செயல்படுகிறது'; கூடலுாரில் நீலகிரி எம்.பி., ராஜா கருத்து

ADDED : அக் 07, 2025 08:57 PM

கூடலுார்: கூடலுார் வனவிலங்கு வார விழா ஜீன்பூல் தாவர மையத்தில் நடந்தது. டி.எப்.ஓ., வெங்கடேஷ் பிரபு வரவேற்றார். மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தலைமை வகித்தார்.
விழாவில், நீலகிரி எம்.பி., ராஜா பேசுகையில், ''கூடலுாரில் வன விலங்குகளால் ஏற்படும் பாதிப்பை தடுக்க அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கண்காணிப்பு பணிக்காக மூன்று புதிய வாகனங்கள் வழங்கப்பட்டன. இரண்டு கி.மீ., துாரம் வரை வன விலங்குகள் வருகையை கண்காணித்து, மக்களை 'அலாட்' செய்யும் வகையில், நவீன செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. கண்காணிப்பு பணியில் வனத்துறையினர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்,''என்றார்.
தொடர்ந்து, காட்டு யானை தாக்கி உயிரிழந்த இருவர் குடும்பங்களுக்கு, தன் தொகுதி நிதியிலிருந்து தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கினார்.
அதிவிரைவுபடை வீரர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள், ஜீன்புல் தாவர மையத்தில் சிறப்பாக பணியாற்றிய நான்கு பழங்குடியின ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை, காட்டு யானையிடமிருந்து ஒருவரை காப்பாற்றிய, தினேஷ் என்பவர்களுக்கு பரிசு தொகை வழங்கி பாராட்டினர்.
நிகழ்ச்சியில், நீலகிரி எஸ்.பி., நிஷா, மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் உட்பட பலர் பங்கேற்றனர்.
தொடர்ந்து, ஜீன்பூல் நுழைவு வாயிலில் துவங்கிய விழிப்புணர்வு ஊர்வலத்தை நீலகிரி எம்.பி., ராஜா துவக்கி வைத்தார். ஊர்வலம் நகரின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று புதிய பஸ் ஸ்டாண்டில் நிறைவு பெற்றது.