/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சாலையை கடந்த 15 அடி நீள பாம்பு: வியப்புடன் ரசித்த சுற்றுலா பயணிகள்
/
சாலையை கடந்த 15 அடி நீள பாம்பு: வியப்புடன் ரசித்த சுற்றுலா பயணிகள்
சாலையை கடந்த 15 அடி நீள பாம்பு: வியப்புடன் ரசித்த சுற்றுலா பயணிகள்
சாலையை கடந்த 15 அடி நீள பாம்பு: வியப்புடன் ரசித்த சுற்றுலா பயணிகள்
ADDED : ஜூன் 23, 2025 08:42 PM

கூடலுார்:
முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி வனப்பகுதி பல அரியவகை பாம்புகளின் முக்கிய வாழ்விடமாகும். இவைகள் அடிக்கடி சாலையை கடந்து செல்வது வழக்கம். இதனால், இச்சாலையில் வாகனங்களை எச்சரிக்கையுடன் மிதமான வேகத்தில் இயக்க வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மசினகுடி -மாயாறு சாலையில், 15 அடி நீளமுள்ள மலைப்பாம்பு, நேற்று மதியம் மெதுவாக சாலையை கடந்து செல்ல துவங்கியது. அவ்வழியாக சென்ற ஓட்டுனர்கள், சுற்றுலா பயணிகள் பாம்பு சாலையை கடந்து செல்லும் வரை வாகனங்களை நிறுத்தி ரசித்து சென்றனர்.
வனத்துறையினர் கூறுகை யில், 'இச்சாலையில், மலைபாம்பு உள்ளிட்ட ஊர்வன உயிரினங்கள் அடிக்கடி சாலையை கடந்து செல்வது வழக்கம். எனவே, சுற்றுலா பயணிகள், ஓட்டுனர்கள் வாகனங்களை எச்சரிக்கையுடன் இயக்க வேண்டும்,' என்றனர்.