/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பூத்து குலுங்கும் சால்வியா மலர்கள்; 'செல்பி' எடுக்கும் சுற்றுலா பயணிகள்

ADDED : அக் 21, 2024 04:23 AM
குன்னுார் : குன்னுார் சிம்ஸ் பூங்காவில், 2வது சீசனுக்கு நடவு செய்த மலர்களில் சால்வியா மலர்கள் பூத்து குலுங்குகிறது.
குன்னுார் சிம்ஸ்பூங்காவில், 2ம் கட்ட சீசனுக்கு, 'மெரி கோல்டு, பிளாகஸ், ஜின்னியா, பெகோனியா, பேன்சி, பெட்டுனியா, ஸ்டாக்ஸ்,' உட்பட 30-க்கும் மேற்பட்ட வகைகளில் மலர் நாற்றுக்கள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது.
மழையின் காரணமாக டேலியா, மெரிகோல்டு மலர்கள் பெரும்பாலும் அழுகியது. சால்வியா, காஸ்மாஸ் உள்ளிட்ட மலர்கள் மழை பாதிப்பில் தப்பி பூத்துக் குலுங்குகிறது. இங்கு சுற்றுலா பயணிகள் பூக்கள் முன்பு நின்று செல்பி எடுக்க ஆர்வம் காட்டுகின்றனர்.