'பார்க்கிங்' பிரச்னைக்கு தீர்வு வேண்டும் வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தல்
'பார்க்கிங்' பிரச்னைக்கு தீர்வு வேண்டும் வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தல்
ADDED : ஜூலை 24, 2026 05:11 AM

கோத்தகிரி: 'கோத்தகிரி நகரில் 'பார்க்கிங்' தொடரும் பிரச்னைக்கு தீர்வு காண வேண்ம்,' என, வியாபாரிகள் சங்கம் வலி யுறுத்தியுள்ளது.
கோத்தகிரியில் தாலுகா வியாபாரிகள் சங்கத்தின், 49வது ஆண்டு விழா நடந்தது. மாவட்ட பொருளாளர் லியாகத் அலி வரவேற்றார். தாலுகா தலைவர் பரணி கேசவன் தலைமை வகித்தார்.
எம்.எல்.ஏ., போஜராஜன், சங்க மாவட்ட தலைவர் முகமது பாரூக் மற்றும் செயலாளர் குலசேகரன் உட்பட, சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளானோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், 'கோத்தகிரி பகுதியில் பெருகிவரும் வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, பார்க்கிங் வசதி ஏற்படுத்த வேண்டும். அடுத்த ஆண்டு சங்கம் சார்பில், சேவை விருது வழங்குவதுடன், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பொது தேர்வில், முதல் மூன்று இடம் பிடிக்கும் மாணவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்படும். நகரில், கழிப்பிடங்களை சீரமைக்க வலியுறுத்துவதுடன், ஆக., 8ம் தேதி சங்க மாவட்ட ஆண்டு விழா நடக்கும்,' என்பன உட்பட, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தாலுாகா பொருளாளர் சந்திரன் நன்றி கூறினார்.
