/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பஜார் பகுதியில் உலா வரும் கால்நடைகள்: கட்டுப்படுத்த வியாபாரிகள் சங்கத்தினர் மனு

ADDED : ஆக 19, 2025 09:08 PM

பந்தலுார்:
பந்தலுார் பஜார் பகுதியில் முகாமிடும், கால்நடை தொல்லையை கட்டுப்படுத்த வலியுறுத்தி, வியாபாரிகள் சங்கம் சார்பில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
வியாபாரிகள் சங்க தலைவர் அஷ்ரப், நகராட்சி ஆணையாளர் மற்றும் தேவாலா போலீஸ் ஸ்டேஷனில் வழங்கியுள்ள மனு:
பந்தலுார் பஜாரில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றுவதில் மெத்தன போக்கு நிலவி வருகிறது. அதில், சமீப காலமாக கால்நடைகள் மற்றும் தெரு நாய்கள் அதிக அளவில் முகாமிட்டு பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளை அச்சுறுத்தி வருகின்றன. இதற்கு தீர்வு காணவேண்டும்.
அதேபோல், பஜார் பகுதியில் கால்வாயுடன் கூடிய நடைபாதை அமைக்கவும் நகராட்சி வணிக வளாகம் முன் அமைந்துள்ள வாட்டர் 'ஏடிஎம்' இயந்திரத்தை இடமாற்றம் செய்ய வேண்டும். நகராட்சிக்கு உட்பட்ட கடைகளுக்கு கடை உரிமம் கோரி விண்ணப்பித்தும் அது குறித்து கண்டு கொள்ளாமல் இருப்பது குறித்தும், வாகன பார்க்கிங் தளம் அமைக்க வலியுறுத்தியும் நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாமல் இருப்பது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதனால், நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, வரும், 28-ம் தேதி காலை, 11:00 மணியிலிருந்து மாலை, 3:00 மணி வரை கடை அடைப்பு மற்றும் தர்ணா போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.