UPDATED : நவ 10, 2026 07:06 PM
ADDED : நவ 10, 2026 07:03 PM
கூடலுார்:
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், பல கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு சங்கத்தின் மாநில துணைத் தலைவர் டில்லி பாபு தலைமை வகித்தார்.
போராட்டத்தில், 'மசினகுடியில் வனத்துறை ஏற்படுத்திய தடைகளையும் நீக்க வேண்டும்; கால்நடைகள் மேய்ச்சலுக்கு அனுமதிக்க வேண்டும். கல்லட்டி சாலையில் சுற்றுலா வாகன போக்குவரத்துக்கு தடையின்றி அனுமதிக்க வேண்டும். வன உரிமைச் சட்டம், 2006 முழுமையாக அமல்படுத்த வேண்டும்,’ என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வியாபாரிகள், இரு மணி நேரம் கடைகளை அடைத்திருந்தனர். ம.கம்யூ., மாவட்ட செயலாளர் பாஸ்கரன், ஏரியா கமிட்டி செயலாளர் சுரேஷ், விவசாய சங்க மாவட்ட தலைவர் குஞ்சுமுகமது, செயலாளர் யோஹன்னன் உட்பட பலர் பங்கேற்றனர். மலைவாழ் மக்கள் சங்க மாவட்ட செயலாளர் மணி நன்றி கூறினார்.
