/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தமிழக பாரம்பரிய நடனம்; கல்லூரி மாணவியர் அசத்தல்
/
தமிழக பாரம்பரிய நடனம்; கல்லூரி மாணவியர் அசத்தல்
ADDED : பிப் 14, 2024 11:35 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார் : குன்னுார் பிராவிடன்ஸ் மகளிர் கல்லுாரியில் கிராமிய பாரம்பரிய நடனங்கள் அனைவரையும் கவர்ந்தது.
தமிழக கலாசாரங்களை ஊக்குவிக்கும் வகையில் நடந்த இந்த விழாவில், கும்மியாட்டம், புலியாட்டம், கரகாட்டம், வள்ளி கும்மியாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், கோலாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய நடனங்கள் இடம் பெற்றது.
மேலும், படுக மக்களின் பாரம்பரிய படுக நடனத்துடன், நுாற்றுக்கணக்கான மாணவியரின் இந்த பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டமாக கலை கட்டியது. ஏற்பாடுகளை கல்லுாரி தமிழ் துறை பேராசிரியைகள் மாணவியர் செய்தனர்.

