ADDED : ஆக 16, 2026 04:51 PM
குன்னூர்:
மேட்டுப்பாளையம் –- குன்னூர் மலைப்பாதையில் திடீர் ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டது. உள்ளூர் வாகனங்களை போக்குவரத்து போலீசார் தடுத்து மாற்று பாதையில் அனுப்பி போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தினர்.
நீலகிரி மாவட்டத்தில், இரு நாட்கள் விடுமுறையை தொடர்ந்து சுற்றுலா வாகனங்கள் அதிகரித்து காணப்பட்டது. இதனால் குன்னுார் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என கூறி திடீரென ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டது.
இதனால், ஊட்டி – குன்னூர் சாலை பிளாக் பிரிட்ஜ் பகுதியில் போலீசார் வாகனங்களை தடுத்து சிம்ஸ் பார்க் கோத்தகிரி வழியாக திருப்பி விட்டனர்.
இதனால் வெலிங்டன் பகுதியில் வாகன போக்குவரத்து இல்லாத நிலையில், சிம்ஸ் பார்க் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், பொருட்களை எடுத்துச் செல்லும் பிக்-கப் மற்றும் கேரட் உள்ளிட்ட மலை காய்கறிகள் குறிப்பிட்ட நேரத்தில் கொண்டு செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டனர்.
