ADDED : செப் 08, 2025 09:37 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பந்தலுார்; மாநில எல்லையில் நடந்த மரம் வெட்டும் பணியால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பந்தலுாரில் இருந்து கேரளா மாநிலம் கோழிக்கோடு மற்றும் வயநாடு, சேரம்பாடி, எருமாடு பகுதிகளுக்கு செல்லும் சாலை அமைந்துள்ளது.
இந்த சாலையில் காபிக்காடு என்ற இடத்தில் அயனிபலா மரம் சாலையின் குறுக்கே விழும் நிலையில் இருந்ததால், நேற்று மதியம் மரம் மற்றும் மரக்கிளை வெட்டும் பணி நடந்தது. இதனால், கேரளா- தமிழகம் இடையே ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பயணிகள் பாதிக்கப்பட்டனர். வெட்டப்பட்ட மரங்களை துண்டுகளாக்கி சாலை ஓரத்தில் மாற்றிய பின்னர், வாகனங்கள் சென்றன. வருவாய் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.