/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பஜாரில் நடமாடும் ஆடுகளால் போக்குவரத்துக்கு இடையூறு
/
பஜாரில் நடமாடும் ஆடுகளால் போக்குவரத்துக்கு இடையூறு
பஜாரில் நடமாடும் ஆடுகளால் போக்குவரத்துக்கு இடையூறு
பஜாரில் நடமாடும் ஆடுகளால் போக்குவரத்துக்கு இடையூறு
ADDED : அக் 13, 2024 09:58 PM

கோத்தகிரி : கோத்தகிரி கட்டபெட்டு பஜாரில் கூட்டமாக நடமாடும் ஆடுகளால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.
கோத்தகிரியில் இருந்து, 8 கி.மீ., தொலைவில் கட்டபெட்டு பஜார் அமைந்துள்ளது. கக்குச்சி, நடுஹட்டி மற்றும் ஜெகதளா ஊராட்சிகளின் எல்லையாக உள்ளது.
இங்கு, வங்கிகள், இன்கோ தேயிலை தொழிற்சாலை, வி.ஏ.ஓ.,அலுவலகம், தனியார் கிளினிக்குகள், வணிக வளாகங்கள் உட்பட குடியிருப்புகள் நிறைந்து காணப்படுகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் கட்டபெட்டு பஜாரை கடந்து தான், கிராமப்புறங்களுக்கு சென்றுவர வேண்டும். இதனால், கட்டபெட்டு பஜாரில், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கம்.
சமீப காலமாக, பஜாரில் ஆடுகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. கூட்டமாக வரும் ஆடுகளால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வேகமாக இயக்கப்படும் வாகனங்களால், சாலையில் நடமாடும் ஆடுகளுக்கு ஆபத்து அதிகரித்து வருகிறது. எனவே, கோத்தகிரி -ஊட்டி இடையே முக்கிய சந்திப்பில் அமைந்துள்ள கட்டபெட்டு பஜாரில், போக்குவரத்துக்கு இடையூறாக உலா வரும் ஆடுகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும்.