/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
காட்சிமுனையில் வாகன நெரிசல் சுற்றுலா பயணிகள் பாதிப்பு
/
காட்சிமுனையில் வாகன நெரிசல் சுற்றுலா பயணிகள் பாதிப்பு
காட்சிமுனையில் வாகன நெரிசல் சுற்றுலா பயணிகள் பாதிப்பு
காட்சிமுனையில் வாகன நெரிசல் சுற்றுலா பயணிகள் பாதிப்பு
ADDED : டிச 31, 2024 07:01 AM

குன்னுார் : குன்னுார் டால்பின் நோஸ் பகுதியில் சுற்றுலா வாகனங்கள் அதிகரித்ததால், கடும் நெரிசல் ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டத்திற்கு சமவெளி பகுதிகளில் இருந்தும், வெளிநாட்டிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
இந்நிலையில், குன்னுார் டால்பின்நோஸ் மற்றும் லேம்ஸ்ராக் கட்சிமுனை பகுதிகளில், ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.
சுற்றுலா வாகன டிரைவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கூறுகையில்,'மிகவும் குறுகலாக உள்ள இந்த சாலையில், வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன. காலையில் டால்பின் நோஸ் வந்த நிலையில் மாலை, 3:30 மணியாகியும் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது. ரயிலில் செல்ல முன்பதிவு செய்யப்பட்ட நிலையில், ரயிலிலும் செல்ல முடியவில்லை. பார்க்கிங் கட்டணம் நுழைவு கட்டணம் என வசூலித்தாலும் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாத நிலை உள்ளது,'' என்றனர்.