/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பக்தர்களின் கூட்டத்தால் போக்குவரத்து நெரிசல்
/
பக்தர்களின் கூட்டத்தால் போக்குவரத்து நெரிசல்
ADDED : ஜன 17, 2025 11:28 PM

கோத்தகிரி; கோத்தகிரி ஒன்னதலை மடிமனையில் பக்தர்களின் கூட்டம், அதிகரித்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில், படுகர் மக்கள் வாழும் கிராமங்களில் ஹெத்தையம்மன் திருவிழா நடந்து வருகிறது. ஒன்னதலை மடிமனையில் காணிக்கை செலுத்த நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
பக்தர்கள் வந்த வாகனங்கள் அனைத்தும், சாலையின் இரு புறங்களிலும் நிறுத்தப்பட்டன. குறிப்பாக, குடிமனை வளைவில், அரசு பஸ் உட்பட, வாகனங்கள் அணிவகுத்து நின்றதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
போலீசார் மற்றும் கிராம இளைஞர்கள் வாகனங்களை ஒழுங்குப் படுத்தியும், நெரிசல் நீடித்தது. ஒரு வழியாக, தும்மனட்டி மார்க்கத்தில் சென்ற வாகனங்கள், கோவில்மேடு வழியாக திருப்பி விடப்பட்டதை அடுத்து, நெரிசல் சீரானது.
மக்கள் கூறுகையில், 'இன்று ஒன்னதலை மடிமனையில் விழா நடப்பதால், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க உள்ளதால், அதிக நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, கூடுதல் போலீசாரை பணியமர்த்தி, நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.