ADDED : ஜூன் 19, 2026 03:35 AM

அ நிறம் | அளவு
ஊட்டி: ஊட்டி லோயர் பஜார் சாலை மக்கள் அதிக அளவில் பயன்படுத்தும் முக்கிய சாலையாக உள்ளது. சாலையில் வாகனங்களும் அதிக அளவில் சென்று வருகிறது.
சாலையில் இருபுறம் வாகனங்கள் தாறு மாறாக நிறுத்தப் படுவது வாடிக்கையாகிவிட்டது.
நடந்து செல்லும் சுற்றுலா பயணியர் , பொதுமக்களுக்கு இடையூறு வாகனங்களால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
தவிர, அப்பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள், ஊழியர்களின் வாகனங்கள் காலை முதல் மாலை வரை நிறுத்தப்படுவதாலும் போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாக அமைந்துள்ளது.
மக்கள் கூறுகையில், 'போக்குவரத்து போலீசார் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
