/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல்: பயணிகள் தவிப்பு
/
மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல்: பயணிகள் தவிப்பு
மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல்: பயணிகள் தவிப்பு
மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல்: பயணிகள் தவிப்பு
ADDED : ஏப் 07, 2025 09:44 PM

குன்னுார்; குன்னுார் மலைப்பாதையில் கடந்த இரண்டு நாட்களாக ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
ஊட்டி, குன்னுாரில் கடந்த இரண்டு நாட்களாக சுற்றுலா பயணிகள் கூட்டம்; மாநில முதல்வர் ஸ்டாலின் வருகையை ஒட்டி கட்சியினர் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
இதனால், போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது. பல இடங்களில் வாகனங்கள் செல்ல நீண்ட நேரம் தடை விதிக்கப்பட்டது. இதனால், மணிக்கணக்கில் வாகனங்களில் பயணிகள் காத்திருந்தனர்.
நேற்று முன்தினம் இரவு, சுற்றுலா வாகனங்கள், கனரக வாகனங்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் சமவெளிக்கு சென்றதால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
குறிப்பாக, குரும்பாடி பகுதியில் இருந்து மேட்டுப்பாளையம் வரையிலான பகுதிகளில் வாகனங்கள் நின்றதால், இரவு இரண்டு மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனால் ரயில்கள், விமானத்திற்கு செல்லும் பயணிகள் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
'ஹைவே பெட்ரோல்' போலீசார் மற்றும் பர்லியாரில் உள்ள இரு போலீசார், போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய மிகவும் சிரமப்பட்டனர்.