/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மணி கூண்டில் போக்குவரத்து போலீசாரின் அறை; சமூக விரோதிகளின் கூடாரமாக மாறுது

ADDED : பிப் 06, 2025 08:27 PM

ஊட்டி; ஊட்டி மணிக்கூண்டில் போலீசாரின் கண்காணிப்பு அறை சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது.
ஊட்டி மார்க்கெட் எதிரே மணிக்கூண்டு பகுதியில், 'லோயர் பஜார் சாலை, ஏ.டி.சி., சாலை, கமர்ஷியல் சாலை,' என, முக்கிய சாலைகள் உள்ளன. இங்குள்ள மார்க்கெட் பகுதிக்கு அத்தியாவசிய தேவைக்கு அதிகளவில் மக்கள் வந்து செல்கின்றனர். இங்குள்ள மணிக்கூண்டில் போக்குவரத்து போலீசார் கண்காணிப்பு அறை உள்ளது. இந்த அறையில் போக்குவரத்து போலீசார் உடமைகள் வைக்கவும், அவ்வப்போது அமரவும் இருக்கை இருந்தது.
சமீப காலமாக இந்த கண்காணிப்பு அறையில் பராமரிப்பு இல்லாததால், சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. இரவில் சிலர் இங்கு அமர்வதால், சிக்னல் உபகரணங்கள் அனைத்தும் உடைந்துள்ளது. இருக்கைகளை காணவில்லை.
போக்குவரத்து போலீசார் கடும் வெயிலில் போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபட வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, போலீஸ் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு கண்காணிப்பு அறையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.