/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊராட்சி செயலர்களுக்கான பயிற்சி வகுப்பு
/
ஊராட்சி செயலர்களுக்கான பயிற்சி வகுப்பு
ADDED : ஜன 11, 2025 09:54 AM
ஊட்டி : ஊட்டியில் ஊராட்சி செயலர்களுக்கான பயிற்சி முகாம் துவங்கி நடந்து வருகிறது.
மாவட்டத்திற்கு உட்பட்ட, ஊராட்சி செயலர்கள் மற்றும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு, நிர்வாக அங்கீகாரம் தொடர்பான பொதுவான விபரங்கள்; மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம்; சமூக தணிக்கை, இணையதள வரி வசூல் செயலியின் செயலாக்கம் ஆகியவை குறித்து, பயிற்சி வகுப்பு நடந்து வருகிறது.
இதனை ஆய்வு செய்த கலெக்டர் லட்சுமி பவ்யா, 'பயிற்சியில் வழங்கப்படும் விவரங்களை ஊராட்சி செயலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முழுமையாக தெரிந்து கொண்டு நன்கு பணி புரிய வேண்டும்,' என்றார்.
உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள் பங்கேற்றனர்.

