/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குழந்தைகள் அறிவியல் மாநாடு வழிகாட்டி ஆசிரியர்களுக்கு பயிற்சி
/
குழந்தைகள் அறிவியல் மாநாடு வழிகாட்டி ஆசிரியர்களுக்கு பயிற்சி
குழந்தைகள் அறிவியல் மாநாடு வழிகாட்டி ஆசிரியர்களுக்கு பயிற்சி
குழந்தைகள் அறிவியல் மாநாடு வழிகாட்டி ஆசிரியர்களுக்கு பயிற்சி
ADDED : ஆக 29, 2025 09:15 PM

கூடலுார்; 'நீலகிரியில் நடக்க உள்ள குழந்தைகள் அறிவியல் மாநாட்டில், மாணவர்கள் தரமான ஆய்வு கட்டுரை உருவாக்க, ஆசிரியர்கள் வழிகாட்டியாக இருக்க வேண்டும்,' என, அறிவுறுத்தப்பட்டது.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், 'நீடித்த நீர் மேலாண்மை' என்ற தலைப்பில், மாவட்ட குழந்தைகள் அறிவியல் மாநாடு-2025 ' விரைவில் நடக்க உள்ளது.
அதில், பங்கேற்கும், மாணவர்களின், வழிகாட்டி ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம், கூடலுார் அரசு மேல்நிலை பள்ளியில் நேற்று நடந்தது. செயற்குழு உறுப்பினர் செந்தில்குமார் வரவேற்றார்.
அதில், புளிம்பாறை அரசு உயர் நிலை பள்ளி தலைமை ஆசிரியர் சங்கர் தலைமை வகித்து பேசுகையில், ''பள்ளி மாணவர்களின் அறிவியல் ஆய்வு திறனை மேம்படுத்தும் வகையில், நடப்பு ஆண்டு நீடித்த நீர் மேலாண்மை என்ற தலைப்பில், குழந்தைகள் அறிவியல் மாநாடு நடக்க உள்ளது. அதில், மாணவர்கள் பங்கேற்று திறமையை வெளிப்படுத்த ஆசிரியர்கள் வழிகாட்டிகளாக இருக்க வேண்டும்,'' என்றார்.
கூடலுார் அரசு கல்லுாரி இயற்பியல் துறை தலைவர் அர்ஜுனன் பேசுகையில், ''பள்ளி பருவத்தில் மாணவர்கள், ஆய்வு கட்டுரை தயாரிப்பது, உயர் கல்விக்கு உதவியாக இருக்கும். மாணவர்கள் ஆய்வு கட்டுரைகளை தயாரிக்க ஆசிரியர்கள் சிறந்த வழிகாட்டிகளாக இருக்க வேண்டும்,'' என்றார்.
முகாமில், மாவட்ட தலைவர் மணிவாசகம், செயலாளர் கிருஷ்ணகுமார் உட்பட பலர் பங்கேற்றனர். பொருளாளர் கருணாநிதி நன்றி கூறினார்.