/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
புலிகள் கணக்கெடுப்பு பணி வன ஊழியர்களுக்கு பயிற்சி
/
புலிகள் கணக்கெடுப்பு பணி வன ஊழியர்களுக்கு பயிற்சி
புலிகள் கணக்கெடுப்பு பணி வன ஊழியர்களுக்கு பயிற்சி
புலிகள் கணக்கெடுப்பு பணி வன ஊழியர்களுக்கு பயிற்சி
ADDED : ஜன 20, 2026 06:39 AM

கூடலுார்: கூடலுார் வனக்கோட்டத்தில் இன்று துவங்கி, 6 நாட்கள் நடக்கும், புலிகள் கணக்கெடுப்பு பணி குறித்து வன ஊழியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
கூடலுார் வனக்கோட்டத்தில்,புலிகள் கணக்கெடுப்பு பணி, இன்று துவங்கி, 26ம் தேதி வரை நடக்கிறது. இதற்கான பயிற்சி முகாம், நாடுகாணி ஜீன்பூல் தாவர மையத்தில் நேற்று நடந்தது. முகாமுக்கு, வனச்சரகர் ரவி தலைமை வகித்தார்.
உயிரியலாளர்கள் பழனிச்சாமி, கார்த்திகா ஆகியோர், புலிகள் உள்ளிட்ட
அனைத்து விலங்குகளையும் நேரடியாக பார்பது மற்றும் எச்சம், கால் தடம் உள்ளிட்டவைகள் மூலம் கணக்கெடுப்பு முறை மற்றும் அதன் விபரங்களை 'டேட்டா சீப், மொபைல் ஆப்பில்' பதிவு செய்யும் முறைகள் குறித்து விளக்கினர்.
தொடர்ந்து, கணக்கெடுப்பு விபரங்களை 'மொபைல்' ஆப்பில் பதிவு செய்யும் முறை குறித்து முன் களப்பணியாளர்களுக்கு செயல் விளக்க பயிற்சி அளித்தனர்.
முகாமில், சேரம்பாடி வனச்சரகர் அய்யனார், கூடலுார், ஓவேலி, நாடுகாணி, தேவாலா, சேரம்பாடி, பிதர்காடு வன ஊழியர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் பங்கேற்றனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'கூடலுாரில் நாளை (இன்று) துவங்கி ஆறு நாட்கள் புலிகள் உள்ளிட்ட அனைத்து வனவிலங்குகள், மரங்கள் தாவரங்கள் குறித்த கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. இப்பணியில், 80 வன ஊழியர்கள் ஈடுபடுகின்றனர்,' என்றனர்.

