/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கேத்தியில் விழுந்த மரம்; மலை ரயில்கள் தாமதம்
/
கேத்தியில் விழுந்த மரம்; மலை ரயில்கள் தாமதம்
ADDED : டிச 12, 2024 09:51 PM

குன்னுார்; குன்னுார் கேத்தி அருகே ரயில் பாதையில் மரம் விழுந்ததால் ரயில்கள் தாமதமானது.
குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று மதியம், 2:40 மணியளவில், குன்னுார்- ஊட்டி மலை ரயில் பாதையில், கேத்தி அருகே தண்டவாளத்தில் மரம் விழுந்தது. தகவலின் பேரில், ரயில்வே பொதுப் பணித்துறை ஊழியர்கள் மரத்தை வெட்டி அகற்றினர்.
இதனால், ஊட்டியில் இருந்து மதியம், 2:10 மணிக்கு மேட்டுப்பாளையம் புறப்பட்ட மலை ரயில், ஒரு மணி நேரம் தாமதமாக குன்னுார் வந்து மேட்டுப்பாளையம் சென்றது. 4:00 மணிக்கு குன்னுாரில் இருந்து ஊட்டிக்கு புறப்படும் மலை ரயிலும் அரை மணி நேரம் தாமதமானது.