தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/கொட்டி தீர்த்த கனமழை மரங்கள் விழுந்து பாதிப்பு

கொட்டி தீர்த்த கனமழை மரங்கள் விழுந்து பாதிப்பு

கொட்டி தீர்த்த கனமழை மரங்கள் விழுந்து பாதிப்பு


ADDED : நவ 26, 2026 06:58 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 26, 2026 06:58 PM


Follow on Google
அ நிறம் | அளவு

குன்னுார்: நீலகிரி மாவட்டத்தில் இரவு முழுவதும் பெய்த கனமழையால், குன்னுார் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வீடுகள் சேதமடைந்தன.

குன்னுார் பகுதிகளில் நேற்று (நவ.,25) மாலை, 5:00 மணியளவில் இடி மின்னலுடன் துவங்கிய கனமழை நள்ளிரவும் தொடர்ந்து பெய்தது. அதில், உலிக்கல் கீழ் பாரதிநகர் அம்பிகா என்பவரது வீட்டின் ஒரு பகுதி சுவர இடிந்தது.

குன்னுார் ஓட்டுப்பட்டறை முத்தாலம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்த பூர்ணிமா என்பவரின் வீட்டின் சுவரும் மழையால் இடிந்தது. கன்னி மாரியம்மன் கோவில் தெருவில் சாலையோர மரங்கள் முறிந்து விழுந்ததில் மின்சார கம்பங்கள் சாய்ந்தன. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பும் ஏற்படவில்லை.

வண்டிச்சோலை, அளக்கரை சாலையில் மரங்கள் சாலையின் குறுக்கே விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மீட்பு குழுவினர், மக்கள் இணைந்து மரங்களை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

மழை நிலவரம் (மி.மீ.,)



கெத்தை,83;எடப்பள்ளி,72; கிண்ணக்கொரை,63; பர்லியார், 55; குந்தா,54; கோத்தகிரி,52; பாலக்கொலா,48; குன்னுார், 47; கோடநாடு, 44; உலிக்கல், 38; குன்னுார் ரூரல்,35; கீழ்கோத்தகிரி, 31; ஊட்டி,18.6; எமரால்டு,15; அப்பர்பவானி,14; அவலாஞ்சி,13; கேத்தி,12; பந்தலுார், 10; சேரங்கோடு, 9; போர்த்திமந்து, 8; பார்சன்ஸ்வேலி, 5; தேவாலா, 2., என மழை அளவு பதிவாகி உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us