/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பள்ளியில் பழங்குடியினர் திருவிழா; காட்சிக்கு வைக்கப்பட்ட உணவு வகைகள்

ADDED : நவ 25, 2024 10:27 PM

கோத்தகிரி; கோத்தகிரி குஞ்சப்பனை அரசு உண்டு உறைவிட பள்ளியில், பழங்குடியினரின் பாரம்பரிய உணவு திருவிழா நடந்தது.
'தி கார்டன் ஆப் ஹோப் டிரஸ்ட்' பண்டைய பழங்குடியினரின் மூலிகை அறிவை புதுப்பிக்கும் திட்டத்தின் கீழ், நடத்திய இந்த உணவு திருவிழாவில், ஏராளமான உணவு வகைகள் காட்சிப்படுத்தப்பட்டன.
குறிப்பாக, உள்ளூரில் விளையும், 'பலா, மொச்சை, சுண்டைக்காய், மூங்கில், சிறு தானியங்களிலான தேன், தினை மாவு, கம்பு உருண்டை,கேழ்வரகு உருண்டை, நெல்லிக்காய், அத்திக்காய் பொறியல், மரவள்ளிக்கிழங்கு, பனங்கிழங்கு, மக்காச்சோளம், வரகு பிரியாணி, மாப்பிள்ளை சம்பா சோறு மற்றும் சாமை பாயாசம்,' உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட உணவு வகைகள் பாரம்பரிய முறையில் சமையல் செய்து காட்சிக்கு வைக்கப்பட்டது.
இதனை, பள்ளி மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் கண்டு, உணவு வகைகளை ருசித்தனர். நிகழ்வில், இயக்குனர் சத்தியசீலன், டாக்டர் தீபன், பள்ளி தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி உட்பட, அறக்கட்டளை பணியாளர்கள் என, 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.