/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பழங்குடியின உற்பத்தி பொருள் விற்பனை மையம் அவசியம்
/
பழங்குடியின உற்பத்தி பொருள் விற்பனை மையம் அவசியம்
ADDED : அக் 21, 2024 04:40 AM
குன்னுார் : குன்னுாரில், மா.கம்யூ., கட்சியின் இடைக்குழு மாநாடு நடந்தது.
நீலகிரி மாவட்ட செயலாளர் பாஸ்கரன் மாநாட்டை துவக்கி வைத்தார். தலைமைகுழு உறுப்பினர்கள் மனோஜ்குமார், சுப்ரமணி முன்னிலை வகித்தனர்.
அதில், 'பழங்குடி கிராமங்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டம் நடத்துவது; வனங்களில் விளைய கூடிய பொருட்களை விற்பனை செய்வதற்காக பழங்குடி மக்களுக்கு தனியான விற்பனை மையம் ஏற்படுத்துவது; தேயிலைக்கு நியாயமான விலை, மலை காய்கறிகளுக்கு கட்டுப்படியான விலை வழங்க வலியுறுத்துவது; மத்திய மாநில அரசு துறைகளில் உள்ள காலிபணியிடங்கள் நிரப்புவது,' உட்பட, 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிறைவாக, 11 பேர் கொண்ட இடைக்குழு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதில், மீண்டும் இடைக்குழு செயலாளராக இளங்கோவன் தேர்வு செய்யப்பட்டார். மூத்த நிர்வாகிகள் ராமன்குட்டி, சுப்ரமணி, தேவாரம், ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். கண்ணன் நன்றி கூறினார்.

