/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வன உரிமை சட்டங்களை பழங்குடியினர் அறிய வேண்டும்; விழிப்புணர்வு கூட்டத்தில் கலெக்டர் தகவல்

ADDED : நவ 08, 2024 10:44 PM
ஊட்டி ; 'தனி மனித உரிமை பெற்றுள்ள பழங்குடியின மக்களுக்கு அடுத்த கட்டமாக சமூக உரிமை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, கலெக்டர் தெரிவித்தார்.
ஊட்டி பர்ன்ஹில் கூட்டரங்கில் மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை சார்பில் வன உரிமை சட்டம், 2006 அமல்படுத்துதல் தொடர்பான, பழங்குடியின மக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கலெக்டர் லட்சுமி பவ்யா பேசியதாவது: வன உரிமையை சட்டத்தின் கீழ், பல்வேறு சட்டங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதில், தனி மனித உரிமை, சமூக உரிமை, வளர்ச்சி பணி உரிமை உட்பட பல உரிமை சட்டங்கள் முக்கியத்துவம் பெறுகிறது.
இந்த சட்டங்களை பழங்குடியின மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு அறிந்து கொள்ளும் பட்சத்தில் நமக்கான உரிமைகளை நாமே பெற்று கொள்ளவும் நமக்கான தேவைகளை கேட்டு பெற முடியும்.
மேலும், தனிமனித உரிமை பெற்றுள்ள பழங்குடியின மக்களுக்கு அடுத்த கட்டமாக சமூக உரிமை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பழங்குடியினருக்கு கடன் உதவிகள் வழங்க ஏதுவாக வங்கியாளர்களுக்கு தனியாக வன உரிமை சட்டம் தொடர்பாக பயிற்சி மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
வன உரிமை சட்ட, மாநில கண்காணிப்பு குழு உறுப்பினர் ராஜன், மாவட்ட வன அலுவலர் கவுதம், ஊட்டி ஆர்.டி.ஓ., சதீஷ், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சக்திவேல் உட்பட பங்கேற்றனர்.