/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சுயதொழிலுக்கு உதவிட பழங்குடியினர் கோரிக்கை
/
சுயதொழிலுக்கு உதவிட பழங்குடியினர் கோரிக்கை
ADDED : டிச 03, 2024 05:52 AM

பந்தலுார்; 'பழங்குடியின மக்கள் சுய தொழில் செய்ய உதவ வேண்டும்,' என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பந்தலுார் அருகே அய்யன்கொல்லி பகுதியில் செயல்படும், கருந்தண்டன் பணியர் சமுதாய நலச்சங்கம் சார்பில், மாவட்ட கலெக்டரிடம் அளித்த மனு:
பழங்குடியின சமுதாய மக்கள் சுய தொழில் செய்யும் வகையில், அரசு பல்வேறு பயிற்சிகளை வழங்குகிறது. ஆனால், தொடர்ந்து தொழிலை செய்வதற்கு உரிய, வழிகாட்டுதல் மற்றும் கடனுதவி வழங்கப்படுவதில்லை.
இதனால், பயிற்சி பெற்றும் பயன் இல்லாத நிலை உள்ளது. எங்கள் பகுதியில் காளான் வளர்ப்பு மேற்கொள்ள ஏதுவாக வைக்கோல் மற்றும் காலநிலை உள்ளது. எனவே, காளான் வளர்க்க உரிய பயிற்சியும், கடனுதவியும் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.