/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பிறப்பு சான்றிதழ் இல்லாத பழங்குடியினர் விண்ணப்பிக்கலாம்
/
பிறப்பு சான்றிதழ் இல்லாத பழங்குடியினர் விண்ணப்பிக்கலாம்
பிறப்பு சான்றிதழ் இல்லாத பழங்குடியினர் விண்ணப்பிக்கலாம்
பிறப்பு சான்றிதழ் இல்லாத பழங்குடியினர் விண்ணப்பிக்கலாம்
ADDED : டிச 19, 2025 05:24 AM
கூடலுார்: 'கூடலுார் பகுதியில் பிறப்பு சான்றிதழ் இல்லாத பழங்குடியினர் தனித்தனியாக விண்ணப்பம் அளித்தால், சான்றிதழ் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும்,' என, ஆர்.டி.ஓ., தெரிவித்தார்.
கூடலுார் பகுதியில் பூர்வ குடிகளான பழங்குடி மக்கள், பலர் பிறப்பு சான்றிதழ் இல்லாததால், ஆதார் அட்டை பெற முடியாத நிலையில் உள்ளனர்.
இது போன்ற பழங்குடியினரை கண்டறிந்து அவர்களுக்கு சான்றிதழ் வழங்குவது குறித்து, தனியார் பொது நல அமைப்பின் சார்பில், ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கூடலுார் ஆர்.டி.ஓ., குணசேகரன் கூறுகையில், ''பிறப்பு சான்றிதழ் இல்லாததால், பழங்குடியினர் ஆதார் அட்டை பெற முடியவில்லை, என, மனு அளித்துள்ளனர்.
இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படும். மேலும், பழங்குடியினர் பிறப்பு சான்றிதழ் கேட்டு தனித்தனியாக மனு அளித்தால், விசாரணை செய்து, பிறப்பு சான்றிதழ் கிடைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

