/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
காந்தி சேவா அறக்கட்டளையில் நடந்த முப்பெரும் விழா; நலிந்தோருக்கு நலத்திட்ட உதவிகள்

ADDED : அக் 03, 2024 11:50 PM

மஞ்சூர் : மஞ்சூரில் காந்தி சேவா அறக்கட்டளையின் முப்பெரும் விழாவில் நலிந்தோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
மஞ்சூர் காந்தி சேவா அறக்கட்டளை சார்பில், 'மகாத்மா காந்தியின், 156ம் ஆண்டு ஜெயந்தி விழா அறக்கட்டளையின், 23ம் ஆண்டு துவக்க விழா மற்றும் நலத்திட்ட உதவிகள்,' என, முப்பெரும் விழா நடந்தது. அறக்கட்டளை தலைவர் வாசுதேவன் தலைமை வகித்தார். செயலாளர் போஜன், மூர்த்தி, போஜாகவுடர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினர்களாக, உபதலையை சேர்ந்த மேகனாதசாய், மஞ்சூர் அனைத்து கடைக்காரர்கள் சங்க தலைவர் சிவராஜ், ரோட்டரி சங்க நிர்வாகி சுரேஷ் குமார் பங்கேற்று பேசினர்.
தொடர்ந்து, மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாறு குறித்து, சட்ட மைய நிறுவனர் வக்கீல் விஜயன் பேசினார். பின், சினிகி அம்மாள் அறக்கட்டளை சார்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவ, மாணவிகள், இல்லத்தரசிகளுக்கு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. அறக்கட்டளை மேலாளர் இன்பசாகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.