/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அழகு ஸ்ரீ பண்ணாரி அம்மன் கோவிலில் மஞ்சள் நீராட்டு விழா
/
அழகு ஸ்ரீ பண்ணாரி அம்மன் கோவிலில் மஞ்சள் நீராட்டு விழா
அழகு ஸ்ரீ பண்ணாரி அம்மன் கோவிலில் மஞ்சள் நீராட்டு விழா
அழகு ஸ்ரீ பண்ணாரி அம்மன் கோவிலில் மஞ்சள் நீராட்டு விழா
ADDED : ஏப் 14, 2025 09:50 PM
கோத்தகிரி,; கோத்தகிரி கடைவீதியில் எழுந்தருளியுள்ள அழகு ஸ்ரீ பண்ணாரி அம்மன் கோவில் பூகுண்டம் திருவிழா, கடந்த 31ம் தேதி துவங்கிய நடந்து வந்தது.
நாள்தோறும், பல்வேறு உபயதாரர்கள் மூலம், அம்மனுக்கு அபிஷேக அலங்கார சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
கடந்த, 8ம் தேதி பூ குண்டம் திருவிழா சிறப்பாக நடந்தது. தொடர்ந்து, அம்மனின் திருத்தேர் ஊர்வலம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கடந்த, 11ம் தேதி, பகல், 2:00 மணிக்கு மாவிளக்கு பூஜை, மாலை, 6:00 மணிக்கு அம்மனின் சிம்மவாகனம் மற்றும் புலி வாகன ஊர்வலம் நடந்தது. நிறைவு நாளான நேற்று காலை, 9:00 மணிக்கு, மஞ்சள் நீராட்டு விழா நடந்தது.
தொடர்ந்து, பகல், 12:00 மணிக்கு அம்மனுக்கு, அபிஷேக அலங்கார ஆராதனை நடந்தது. பகல், 1:00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, அம்மனை வழிபட்டனர்.