/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சந்தன மரம் வெட்டி கடத்த முயன்ற இருவர் கைது
/
சந்தன மரம் வெட்டி கடத்த முயன்ற இருவர் கைது
ADDED : டிச 25, 2024 07:56 PM

கோத்தகிரி; கோத்தகிரி அருகே, சந்தன மரம் வெட்டி கடத்த முயன்ற இருவர் கைது செய்யப்பட்டனர்.
நீலகிரி வன கோட்டம், கீழ் கோத்தகிரி வனச்சரகம், வாகப்பனை சரிவு காப்பு காட்டில், ரேஞ்சர் ராம் பிரகாஷ் தலைமையில், சரக களப்பணியாளர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, மரம் வெட்டும் சப்தம் கேட்டு, அப்பகுதிக்கு சென்றபோது, மரம் வெட்டியவர்கள் ஓடியுள்ளனர்.
வனத்துறையினர் ஆய்வு செய்தபோது, வெட்டப்பட்டது சந்தன மரம் என தெரியவந்தது. மாவட்ட வன அலுவலருக்கு தகவல் தெரிவித்து, அவரது உத்தரவின் பேரில், குற்ற வாளிகளை வனத்துறையினர் தேடினர்.
அதன்படி, சம்பவத்தில் ஈடுபட்ட, குஞ்சப்பனை கிராமத்தை சேர்ந்த, சிவக்குமார்,32, மற்றும் சின்ராசு,26, ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
வெட்டப்பட்ட சந்தன மரத்தை பறிமுதல் செய்த வனத்துறையினர், இருவரையும் கைது செய்து, கோத்தகிரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.