தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ வளையம் காலில் சிக்கிய இரண்டு காட்டெருமைகளுக்கு சிகிச்சை

வளையம் காலில் சிக்கிய இரண்டு காட்டெருமைகளுக்கு சிகிச்சை

வளையம் காலில் சிக்கிய இரண்டு காட்டெருமைகளுக்கு சிகிச்சை


ADDED : ஜூலை 11, 2025 11:16 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 11, 2025 11:16 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோத்தகிரி,;கோத்தகிரி அருகே கால்களில் வளையம் சிக்கி காயமடைந்த இரண்டு காட்டெருமைகளுக்கு வனத்துறை சார்பில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

கோத்தகிரி வனச்சரகம், சுள்ளிக்கூடு காப்புக்காடு அருகே, எஸ்.கைகாட்டி பகுதியில், நான்கு வயதுடைய பெண் காட்டெருமையின் இடது பின்னங்காலில் சில்வர் வளையம்; கோத்தகிரி சக்திமலை பகுதியில், 8 வயதுடைய ஆண் காட்டெருமை, வலது பின்னங்காலில், சேதமடைந்த சில்வர் பாத்திரம் சிக்கி நடமாடியது குறித்து வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, மாவட்ட வன அலுவலர் கவுதம் உத்தரவுப்படி, முதுமலை புலிகள் காப்பக உதவி கால்நடை மருத்துவர் ராஜேஷ் குமார், கோத்தகிரி வனத்துறை ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உதவியுடன், காட்டெருமைகளுக்கு மயக்க ஊசி செலுத்தி, வளையம் அகற்றப்பட்டு, வன பகுதியில் விடுவிக்கப்பட்டது.

வனத்துறையினர் கூறுகையில், 'வீடுகளில் பயன்படுத்த முடியாத உபயோகமற்ற சேதமான வளையம், சிறிய பாத்திரங்களை பொது இடங்கள் மற்றும் வனப்பகுதியில் வீசி எரியாமல், முறைப்படி அப்புறப்படுத்தினால், இது போன்ற சம்பவங்கள் நிகழாது,'என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us