தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ இரு யானைகள் உயிரிழப்பு

இரு யானைகள் உயிரிழப்பு

இரு யானைகள் உயிரிழப்பு


ADDED : ஆக 18, 2026 06:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 18, 2026 06:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கூடலுார்: முதுமலை, மசினகுடி வனக்கோட்டம், அவரெல்லா அருகே, குதிரைபாறை வனப்பகுதியில், நேற்று முன்தினம், 50 வயது பெண் யானை இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடலை, முதுமலை கால் நடை டாக்டர் ராஜேஷ்குமார், நேற்று, பிரேத பரிசோதனை செய்தார். பிரேத பரிசோதனையில், வயது முதிர்வு காரணமாக நோய் ஏற்பட்டு இருந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

இந்நிலையில், மசினகுடி மாவனல்லா அருகே, அரலட்டிகோட்டை வனப்பகுதியில் வன ஊழியர்கள் நேற்று கண்காணிப்பு பணியின் போது, ஒரு பெண் யானை இறந்து கிடப்பது தெரியவ்நதது. மசினகுடி வனச்சரக ராஜன் மற்றும் அதிகாரிகள் உடலை ஆய்வு செய்து, உடலை பிரேத பரிசோதனை செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர்.

வனத்துறையின் கூறுகையில்,‘பிரேத பரிசோதனை முடிவுக்கு பின், யானை இறந்ததற்கான காரணம் தெரிய வரும்,’ என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us