ADDED : ஆக 18, 2026 06:11 PM
அ நிறம் | அளவு
குன்னுார்: குன்னுார்– -மேட்டுப்பாளையம் மலை பாதையில் சமவெளி பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து வந்த காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன.
இவை உணவு மற்றும் குடிநீரை தேடி அவ்வப்போது மலை ரயில் பாதைகளில் உலா வருகின்றன. இந்நிலையில், ரன்னிமேடு மரப்பாலம் இடையே உள்ள தண்டவாளத்தில் ஒற்றை காட்டு யானை உலா வந்தது. மலை ரயில் வரும் சப்தம் கேட்டவுடன், வனப்பகுதிக்குள் செல்லும் இந்த யானை, ரயில் கடந்தவுடன் மீண்டும் அதே தண்டவாளத்திற்கு வந்து நிற்கிறது. வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
