ADDED : ஆக 28, 2026 04:31 PM
பாலக்காடு: பாலக்காடு மாவட்டம், பல்லச்சேனா, சாளக்கல் பகுதியைச் சேர்ந்தவர் புஷ்பராஜன், 38. அவரது நண்பர் மகேஷ், 43. இருவரும், நேற்று முன்தினம் இரவு ஸ்கூட்டரில், மங்கலம் – கோவிந்தாபுரம் மாநில நெடுஞ்சாலை வழியாக, பல்லசேனா பகுதியிலிருந்து கொல்லங்கோடு நோக்கி சென்றனர்.
அப்போது, பழையங்காடி பகுதியில், எதிரே வந்த தனியார் பஸ்சும் ஸ்கூட்டரும் நேருக்குநேர் மோதின. இதில், ஸ்கூட்டரில் சென்ற இருவரும் படுகாயமடைந்தனர். அங்கிருந்த மக்கள் இருவரையும் மீட்டு கொல்லங்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அதன்பின், மேல் சிகிச்சைக்காக புஷ்பராஜன் மாவட்ட அரசு மருத்துவமனையிலும், மகேஷ் திருச்சூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். விபத்து குறித்து கொல்லங்கோடு போலீசார், வழக்கு பதிவு செய்வது விசாரிக்கின்றனர்.
