/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பந்திப்பூரில் புலிகள் தாக்கி இருவர் பலி; முதுமலையில் உஷார் நடவடிக்கை
/
பந்திப்பூரில் புலிகள் தாக்கி இருவர் பலி; முதுமலையில் உஷார் நடவடிக்கை
பந்திப்பூரில் புலிகள் தாக்கி இருவர் பலி; முதுமலையில் உஷார் நடவடிக்கை
பந்திப்பூரில் புலிகள் தாக்கி இருவர் பலி; முதுமலையில் உஷார் நடவடிக்கை
ADDED : நவ 07, 2025 08:47 PM
கூடலூர்: கர்நாடகா பந்திப்பூர் புலிகள் காப்பகம், முலியூறு அருகே, புலி தாக்கி மேலும் ஒரு விவசாயி உயிரிழந்த நிலையில், பந்திப்பூர், நாகர்ஹோலா புலிகள் காப்பகங்களில் சுற்றுலா பயணிகளுக்கு தற்காலிக தடை விதித்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டி அமைந்துள்ளது, கர்நாடகா பந்திப்பூர் புலிகள் காப்பகம். பந்திப்பூருக்கு உட்பட்ட முலியூறு வனச்சரகத்தை ஒட்டிய விவ சாய தோட்டங்களில் நுழைந்த புலி, இரண்டு மாதத்தில், இருவரை தாக்கி கொன்றது. காயமடைந்த இருவர் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து வனத்துறையினர் புலி பிடிக்கும் பணியில் ஈடு பட்டனர். அப்பகுதியில் உலா வந்த இரண்டு புலிகளில், ஒன்றை வனத்துறையினர் பிடித்து, மைசூரில் உள்ள புலிகள் மறுவாழ்வு மையத்திற்கு கொண்டு சென்று பரா மரித்து வருகின்றனர்.
தொடர்ந்து மற்றொரு புலியை தேடி பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், முலியூறு வனச்சரகம் சர்கூர் பகுதியில் நேற்று, காலை விவசாயத் தோட்ட பணியில் இருந்த விவசாயி ஒருவரை புலி இழுத்து சென்று, தாக்கி கொன்றது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, புலியை பிடிக்க பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர். புலியை தேடும் பணியில் வன ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையை சம்பவத்தை தொடர்ந்து, பந்திப்பூர், நாகர்ஹோலா புலிகள் காப்பகங்களில், சுற்றுலா பயணிகளுக்கான வாகன சவாரி நிறுத்தப்பட்டு, சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.
அதிகாரிகள் கூறுகையில், 'அரசு உத்தரவுபடி, பந்திப்பூர், நாகர்ஹோலா புலிகள் காப்பகங்களில் சுற்றுலாபயணிகளுக்கான, வாகன சவாரி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அடுத்த உத்தரவு வரும் வரை இத்தடை தொடரும்' என, கூறினர்.
பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் சுற்றுலா பயணிகளுக்கான வாகன சவாரி நிறுத்தப்பட்டுள்ளதால், அதனை ஒட்டிய முதுமலை புலிகள் காப்பகத்துக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும் இங்கு உஷார் நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

