sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 06, 2026 ,மாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

 ஆபத்தை உணராத தொழிலாளர்கள் கேரட் லாரியின் மேல் பயணிப்பதால் ஆபத்து

/

 ஆபத்தை உணராத தொழிலாளர்கள் கேரட் லாரியின் மேல் பயணிப்பதால் ஆபத்து

 ஆபத்தை உணராத தொழிலாளர்கள் கேரட் லாரியின் மேல் பயணிப்பதால் ஆபத்து

 ஆபத்தை உணராத தொழிலாளர்கள் கேரட் லாரியின் மேல் பயணிப்பதால் ஆபத்து


ADDED : பிப் 05, 2026 06:19 AM

Google News

ADDED : பிப் 05, 2026 06:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோத்தகிரி: கோத்தகிரி பகுதியில் அறுவடை செய்த கேரட் லாரி மூட்டையின் மேல், தொழிலாளர்கள் ஆபத்தை உணராமல் பயணிக்கும் நிலை தொடர்கிறது.

மாவட்டத்தில் தேயிலை முக்கிய விவசாய மாக இருந்தாலும், கணிசமான பரப்பளவில், மலை சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. நடப்பாண்டு, கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில், கேரட் அதிக பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளது.

தயாரான கேரட்டின் விலை குறைந்துள்ளதால், அறுவடை செய்யப்படாமல் உள்ளது. தற்போது, தொடர்ந்து மழை பெய்து வருவதால், தோட்டங்களில் மழைநீர் தேங்கி தயாரான கேரட் அழுக வாய்ப்புள்ளது.

இந்நிலை, தொடர்ந்தால் தோட்டத்திற்கு போட்ட முதலீடு கூட கிடைக்காமல், விவசாயிகளுக்கு இழப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால், முதலீடு கிடைத்தால் போதும் என்ற நிலையில், கூடுதல் பணியாளர்களை பணியமர்த்தி அவசரகதியில் அறுவடை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போது, மழையுடன் மேகமூட்டமான காலநிலை நிலவுகிறது. அறுவடை செய்யப்பட்ட கேரட் மூட்டை லாரியின் மேல், தொழிலாளர்கள் ஆபத்தை உணராமல், கழுவுவதற்காக கொண்டு செல்வது தொடர்கிறது.

எனவே, சம்பந்தப்பட்ட துறையினர் குறிப்பிட்ட லாரி மற்றும் தோட்ட உரிமையாளர்களை கண்காணித்து அறிவுரை வழங்கி நடவடிக்கை எடுப்பது அவசியம்.






      Dinamalar
      Follow us