/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மத்திய இணை அமைச்சர் முன்னிலையில் பா.ஜ.,வில் ஐக்கியம்
/
மத்திய இணை அமைச்சர் முன்னிலையில் பா.ஜ.,வில் ஐக்கியம்
மத்திய இணை அமைச்சர் முன்னிலையில் பா.ஜ.,வில் ஐக்கியம்
மத்திய இணை அமைச்சர் முன்னிலையில் பா.ஜ.,வில் ஐக்கியம்
ADDED : ஜன 31, 2024 11:40 PM

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையத்தில் மத்திய இணை அமைச்சர் முருகன் முன்னிலையில், தி.மு.க., உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பா.ஜ.,வில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
கோவை வடக்கு மாவட்ட பா.ஜ., தலைவர் சங்கீதா, மாவட்ட பொதுச் செயலாளர் சுபாஷ் சந்திர போஸ் ஆகியோர் முன்னிலையில், கூடலூர் தி.மு.க., மாவட்ட பிரதிநிதி சுரேஷ்குமார், எல்.எம்.டபிள்யூ., முன்னாள் தொழிற்சங்க தலைவர் பாலசுப்பிரமணியம் மற்றும் மூர்த்தி உள்ளிட்டோர் மத்திய இணை அமைச்சர் முருகனுக்கு சால்வை அணிவித்து, பா.ஜ.,வில், தங்களை இணைத்துக் கொண்டனர்.
புதியதாக இணைந்த உறுப்பினர்களுக்கு பெரியநாயக்கன்பாளையம், கூடலூர் நகர பா.ஜ.,வினர் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.