/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கூடலுாரில் பாதுகாப்பு இல்லாத தரை மட்ட கிணறுகள் வனவிலங்குகள் பலியாகும் அபாயம்
/
கூடலுாரில் பாதுகாப்பு இல்லாத தரை மட்ட கிணறுகள் வனவிலங்குகள் பலியாகும் அபாயம்
கூடலுாரில் பாதுகாப்பு இல்லாத தரை மட்ட கிணறுகள் வனவிலங்குகள் பலியாகும் அபாயம்
கூடலுாரில் பாதுகாப்பு இல்லாத தரை மட்ட கிணறுகள் வனவிலங்குகள் பலியாகும் அபாயம்
ADDED : மார் 07, 2024 04:51 AM

கூடலுார், : கூடலுாரில் பாதுகாப்பில்லாத தரை மட்ட கிணறுகளால், வனவிலங்கள் பலியாகும் நிலை ஏற்பட்டுள்ளதால், கிணற்றை சுற்றி பாதுகாப்பு தடுப்பு அமைக்க வேண்டும்.
கூடலுார், பந்தலுார் பகுதியில் வனத்தை ஒட்டிய விவசாய தோட்டங்கள், குடியிருப்பு பகுதிக்கு, புள்ளிமான், குரைக்கும் மான், கடமான், சிறுத்தை மற்றும் முயல் உள்ளிட்ட வன உயிரினங்கள், மேய்ச்சலுக்கு செல்வது வாடிக்கையாக உள்ளது.
அவ்வாறு வரும் விலங்குகள் இப்பகுதியில், பாதுகாப்பு தடுப்பு இன்றி உள்ள தடைமட்ட கிணறுகள் மற்றும் பயனற்ற பாழடைந்த கிணறுகளில், விழுந்து உயிருக்கு போராடி பலியாகும் நிலை ஏற்படுகிறது. சில இடங்களில் மீட்கும் பணிகள் நடக்கின்றன.
கடந்த வாரம், கூடலுார் ஓவேலி அருகே, தனியார் காபி தோட்டத்தில் உள்ள தரைமட்ட பாழடைந்த கிணற்றில் விழுந்து தவித்த பெண் கடமானை வனத்துறையினர், தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டு விடுவித்தனர்.
வனவிலங்கு ஆர்வலர்கள் கூறுகையில், 'இது போன்ற சம்பவங்களை தடுக்க, வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு, தரைமட்ட கிணறுகளை சுற்றி பாதுகாப்பு தடுப்பு அமைக்கவும், பயனற்ற பாழடைந்த கிணறுகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'தரைமட்ட கிணறுகளை சுற்றி பாதுகாப்பு தடுப்பு அமைக்க தொடர்ந்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். மேலும், அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு, பாழடைந்த கிணற்றை மூடவும் அறிவுறுத்தி வருகிறோம் குறிப்பிட்ட இடங்களில் மீண்டும் ஆய்வு மேற்கொள்ளப்படும்,' என்றனர்.

