சாலையோரம் அகற்றாத மரங்கள்: போக்குவரத்துக்கு இடையூறு
சாலையோரம் அகற்றாத மரங்கள்: போக்குவரத்துக்கு இடையூறு
UPDATED : நவ 05, 2026 11:47 PM
ADDED : நவ 04, 2026 05:59 PM

கோத்தகிரி:
கோத்தகிரி நெக்கிக்கம்பை பகுதியில், சாலையில் விழுந்த மரங்களை அகற்றாததால், போக்கு வரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, கோத்தகிரி பகுதியில் பெய்த கனமழையில், அதிகாலை நேரத்தில் கோத்தகிரி - கட்டபெட்டு இடையே, நெக்கிக்கம்பை பகுதியில் மரம் விழுந்து, ஒரு வீடும், அருகில் உள்ள ரேஷன் கடையும் சேதம் அடைந்தது. தீயணைப்பு துறை மற்றும் நெடுஞ்சாலை துறையினர் மரத்தை வெட்டி போக்குவரத்தை சீரமைத்தனர்.
இருப்பினும், வானுயரந்த மரங்கள் சாலையோரத்தில் விடப்பட்டுள்ளது. இதனால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. தற்போது, குன்னுார் சாலை துண்டிக்கப்பட்டு, பராமரிப்பு பணி நடந்து வரும் நிலையில், அனைத்து கனரக வாகனங்கள் கோத்தகிரி வழியாக இயக்கப்படுவதால், குறிப்பிட்ட இடத்தில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.
எனவே, சம்பந்தப்பட்ட நிர்வாகம், சாலையோரத்தில் வைக்கப்பட்டுள்ள மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
