/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அகற்றப்படாத குப்பை கழிவுகள்; சுகாதாரம் வெகுவாக பாதிப்பு
/
அகற்றப்படாத குப்பை கழிவுகள்; சுகாதாரம் வெகுவாக பாதிப்பு
அகற்றப்படாத குப்பை கழிவுகள்; சுகாதாரம் வெகுவாக பாதிப்பு
அகற்றப்படாத குப்பை கழிவுகள்; சுகாதாரம் வெகுவாக பாதிப்பு
ADDED : ஏப் 17, 2025 09:09 PM

பந்தலுார்; பந்தலுார் பஜார் பகுதியில் முறையாக குப்பைகளை அகற்றாததால், சுகாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது.
நெல்லியாளம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியான பந்தலூர் பஜார் உள்ளிட்ட பகுதிகளில், ஒப்பந்ததாரர் ஒருவர் வாயிலாக குப்பைகள் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில், ஈடுபடும் சில துப்புரவு தொழிலாளர்கள், குப்பைகளை முறையாக அகற்றாமல் விட்டு செல்கின்றனர்.
மேலும், காலை நேரத்தில் பஜார் பகுதி குப்பைகளை அகற்றாமல், 10:00 மணிக்கு மேல், பணியில் ஈடுபடுவதால் வாகனங்கள் நிறுத்தும் இடங்களில் குப்பைகளை அகற்றாமல் விட்டு செல்கின்றனர்.
இதனால், சுகாதாரம் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், நகராட்சி நிர்வாகத்தினரும் கண்டுகொள்வதில்லை. எனவே, பஜார் மட்டுமின்றி கிராம பகுதிகளிலும் குப்பைகளை, முறையாக அகற்றி சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.