/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வேரோடு சாய்ந்த மூங்கில்கள்; எல்லையில் போக்குவரத்து பாதிப்பு
/
வேரோடு சாய்ந்த மூங்கில்கள்; எல்லையில் போக்குவரத்து பாதிப்பு
வேரோடு சாய்ந்த மூங்கில்கள்; எல்லையில் போக்குவரத்து பாதிப்பு
வேரோடு சாய்ந்த மூங்கில்கள்; எல்லையில் போக்குவரத்து பாதிப்பு
ADDED : ஜூலை 22, 2025 09:27 PM
கூடலுார்; தமிழக- கேரளா எல்லையில் மூங்கில்கள் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கூடலுார் கீழ்நாடுகாணியில், தமிழக -கேரளா எல்லையை ஒட்டிய வனப்பகுதிகளில் உள்ள மூங்கில்களில், பூ பூத்து, அவைகள் மூங்கில் அரிசிகளாக உதிர்ந்து வருகின்றன. இதனால், மூங்கில் காய துவங்கியுள்ளன. அப்பகுதியில், சாலையை நோக்கி சாய்ந்த நிலையில் உள்ள மூங்கில்கள், அடிக்கடி சாலையில் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
இந்நிலையில், தமிழக -கேரளா எல்லையில் தகரப்பாடி பகுதியில் நேற்று முன்தினம், இரவு, சாலையில் மூங்கில்கள் சாய்ந்து வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனால், தமிழகம், கேரளா, கர்நாடக இடையே இயக்கப்படும் வாகனங்கள் சாலையின் இரு புறமும் நீண்ட வரிசையில் நிறுத்தப்பட்டது.
இரவு நேரம் என்பதால், பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர். கேரளா தீயணைப்பு துறையினர், ஒரு மணி நேரம் போராடி மூங்கில்களை அகற்றினர். தொடர்ந்து, 10:00 மணிக்கு வாகன போக்குவரத்து துவங்கப்பட்டது.
ஓட்டுனர்கள் கூறுகையில், 'சாலை ஓரங்களில் மூங்கில்கள் பூ பூத்து, சாலையை ஒட்டி சாய்ந்துள்ளது. இவைகள் அடிக்கடி சாலையில் விழுந்து போக்கு வரத்து பாதிக்கப்படுகிறது. நெடுஞ்சாலை துறையினர் ஆய்வு செய்து, சாலையோரங்களில் விழும் நிலையில் உள்ள மூங்கில்களை அகற்ற வேண்டும்,' என்றனர்.