/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'தேர்தலுக்காக அவசரமாக ராமர் கோவில் திறப்பு'
/
'தேர்தலுக்காக அவசரமாக ராமர் கோவில் திறப்பு'
ADDED : ஜன 12, 2024 10:37 PM

பந்தலுார்;''வரும் பார்லிமென்ட் தேர்தலுக்காக அவசரமாக ராமர் கோவில் திறக்கப்படுகிறது,''என, காங்., எம்.பி., சசிதரூர் குற்றம் சாட்டினார்.
நீலகிரி மாவட்டம், பந்தலுார் அருகே தாளூரில் செயல்படும், நீலகிரி கலை அறிவியல் கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற, காங்., எம்.பி., சசிதரூர் நிருபர்களுக்கு பேட்டியில், ''ராமர் கோவில் கட்டுமான பணி இன்னும் நிறைவு பெறவில்லை.
ஆனால், மோடி தலைமையிலானஅரசு, பார்லிமென்ட் தேர்தலை மனதில் வைத்து அவசரமாக கோவிலை திறக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளது.
காங்., கட்சியில் அனைத்து மதங்களையும் சார்ந்தவர்கள் உள்ளனர். கட்சியை சார்ந்தவர்கள் யாரையும் கோவிலுக்கு போக வேண்டாம் என கூறவில்லை. நானும் கோவிலுக்கு செல்வேன். அது இறை நம்பிக்கை.
அதை அரசியலாக்கி பார்க்க கூடாது. ஆனால், மோடி தலைமையிலான அரசு கோவிலையும் அரசியலாக மாற்றியுள்ளது,'' என்றார்.