/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
துப்புரவு ஆய்வாளர் பணியிடம் காலி -சான்றிதழ்கள் கிடைப்பதில் சிக்கல்
/
துப்புரவு ஆய்வாளர் பணியிடம் காலி -சான்றிதழ்கள் கிடைப்பதில் சிக்கல்
துப்புரவு ஆய்வாளர் பணியிடம் காலி -சான்றிதழ்கள் கிடைப்பதில் சிக்கல்
துப்புரவு ஆய்வாளர் பணியிடம் காலி -சான்றிதழ்கள் கிடைப்பதில் சிக்கல்
ADDED : டிச 06, 2025 05:23 AM
பந்தலுார்: நெல்லியாளம் நகராட்சியில், பணியாற்றி வந்த துப்புரவு ஆய்வாளர், கடந்த அக்.,22ம் தேதி இடமாறுதலில் சென்று விட்டார். அது முதல் துப்புரவு ஆய்வாளர் பணியிடம் காலியாக உள்ளது. இதனால், பொதுமக்கள் இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட தங்களுக்கு தேவையான சான்றிதழ்களை பெற முடியாத நிலையில் சிரமப்பட்டு வருகின்றனர்.
அத்துடன் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், சுகாதார பணிகள் மேற்கொள்வதிலும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. சுகாதாரம் பாதிப்பு மற்றும் துப்புரவு ஆய்வாளர் மூலம் மேற்கொள்ள வேண்டிய, நடவடிக்கை உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள இயலாத நிலை தொடர்கிறது.
எனவே, நகராட்சியில் காலியாக உள்ள துப்புரவு ஆய்வாளர் பணியிடத்தை பூர்த்தி செய்ய, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.