/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வாழை, பாக்கு, நெற்பயிரை சேதப்படுத்திய காட்டு யானை
/
வாழை, பாக்கு, நெற்பயிரை சேதப்படுத்திய காட்டு யானை
வாழை, பாக்கு, நெற்பயிரை சேதப்படுத்திய காட்டு யானை
வாழை, பாக்கு, நெற்பயிரை சேதப்படுத்திய காட்டு யானை
ADDED : டிச 06, 2025 05:23 AM
கூடலுார்: கூடலுார், கம்மாத்தி, புத்துார்வயல் பகுதியில் முகாமிட்ட காட்டு யானை வாழை, பாக்கு, நெற்பயிர்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
கூடலுார் பகுதியில் குறிப்பிட்ட சில யானைகள், இரவு நேரங்களில் விவசாய தோட்டங்களில் நுழைந்து விவசாய பயிர்களை செதப்படுத்தி மக்களையும் அச்சுறுத்தி வருகின்றன. குறிப்பிட்ட அந்த யானைகளை வனத்துறையினர் அடையாளம் கண்டு கண்காணித்து விரட்டி வருகின்றனர்.
அதன்படி, பாடந்துறை, செலுக்காடி, புளியாம்பாறை, மண்வயல் பகுதிகளில் நுழையும் மக்னா விவசாய பயிர்களை சேதப்படுத்தி மக்களை அச்சுறுத்தி வருகிறது.
கடந்த சில தினங்களாக இரவு நேரங்களில் புத்துார்வயல் கம்மாத்தி பகுதிகளில் முகாமிடும் யானை வாழை, பாக்கு மரங்கள், அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள நெற்பயிர்களை சேதப்படுத்தி, விவசாயிளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி வருகிறது. வனத்துறையினர் கண்காணித்து விரட்டினாலும், குடியிருப்புக்குள் நுழைவதை நிரந்தரமாக தடுக்க முடியவில்லை.
விவசாயிகள் கூறுகையில், 'இப்பகுதியில் நுழையும் காட்டு யானைகள் சேதப்படுத்தும் விவசாய பயிர்களுக்கு வனத்துறை முழுமையாக இழப்பீடு வழங்க வேண்டும். மேலும், காட்டு யானைகள் விவசாய தோட்டங்கள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைவதை தடுக்க வேண்டும்,' என்றனர்.

