/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சாலையோரம் மரக்கன்று நடுவதால் பாசன கால்வாய் பாதிக்கும் அபாயம்
/
சாலையோரம் மரக்கன்று நடுவதால் பாசன கால்வாய் பாதிக்கும் அபாயம்
சாலையோரம் மரக்கன்று நடுவதால் பாசன கால்வாய் பாதிக்கும் அபாயம்
சாலையோரம் மரக்கன்று நடுவதால் பாசன கால்வாய் பாதிக்கும் அபாயம்
ADDED : டிச 06, 2025 05:23 AM

கூடலுார்: கூடலுார் ஸ்ரீமதுரை கம்மாதி பகுதியில், சீரமைக்கப்பட்ட சாலையோரம் நடவு செய்துள்ள மரக்கன்றுகள் வளர்ந்தால், பாசன கால்வாய் சேதமடையும் அபாயம் ஏற்பட்டுளளது.
கூடலுார் மண்வயல் கம்மாத்தி வழியாக செல்லும் கம்மாத்தி ஆற்றின் குறுக்கே, தடுப்பணை அமைத்து, அந்த நீரை பாசன கால்வாய் வழியாக விவசாயத்துக்கு வழங்கி வருகின்றனர். பாசன நீர் கால்வயை ஒட்டி, கம்மாத்தி வரை செல்லும் சாலை சமீபத்தில் சீரமைக்கப்பட்டது. இச்சாலைக்கும், பாசன நீர் கால்வாய்க்கும் இடையே சுமார் மூன்று அடி அகலத்தில் உள்ள சாலையோர பகுதியில் ஊராட்சி சார்பில் மரக்கன்றுகள் நடவு செய்துள்ளனர்.
இந்த மரக்கன்றுகள், வளர்ந்து பெரிதாகும்போது, அதனை ஒட்டிய சாலையும், பாசன நீர் கால்வாயும் சேதமடையும் ஆபத்து உள்ளது.
சிவக்குமார் கூறுகையில், 'சாலைக்கும் தடுப்பணைக்கும் இடையே உள்ள, சிறிய பகுதியில், நடவு செய்யப்பட்ட மரக்கன்று வளர்ந்து சாலையும், தடுப்பணையும் சேதமடையும் ஆபத்து உள்ளது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நடவு செய்யப்பட்டுள்ள மரக்கன்றுகளை அப்பகுதியில் இருந்து அகற்றி வேறு பகுதியில் நடவு செய்ய வேண்டும்,' என்றார்.

