/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
விதைப்பு பணியில் விவசாயிகள் ஆர்வம்
/
விதைப்பு பணியில் விவசாயிகள் ஆர்வம்
ADDED : டிச 06, 2025 05:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோத்தகிரி: கோத்தகிரி பகுதியில் கேரட் விதைப்பு பணியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கோத்தகிரி பகுதியில் தேயிலை விவசாயம் பிரதானமாக இருந்தாலும், விலை வீழ்ச்சி காரணமாக, மலை காய்கறி சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் கட்டி வருகின்றனர். குறிப்பாக, பனி காலங்களில் அதிகம் பாதிக்காத கேரட் விதைத்தால், மார்ச் மாதம் அறுவடைக்கு தயாராகும்,
இதனால், கோத்தகிரி பகுதியில், நெடுகுளா, கூக்கல்தொரை, ஈளாடா மற்றும் கட்டபெட்டு உள்ளிட்ட நீர் ஆதாரம் உள்ள விளை நிலங்களில், நுாற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் கேரட் விதைப்பு பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

