ADDED : ஜன 25, 2024 12:10 AM

பெ.நா.பாளையம் : துடியலூர் அருகே உள்ள வடமதுரை விருந்தீஸ்வரர் கோவிலில் வள்ளி கும்மி நடனத்தின் அரங்கேற்ற நிகழ்ச்சி நடந்தது.
கணபதி கண்டியப்பன் நினைவாக, பழனிகவுண்டன்புதூர் ஆசிரியர் வெங்கடேசன் சார்பில், வள்ளி கும்மி நடனத்தின் அரங்கேற்ற நிகழ்ச்சி நடந்தது. கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ., அருண்குமார் துவக்கி வைத்தார். குருடம்பாளையம் ஊராட்சி தலைவர் ரவி, டியூகாஸ் முன்னாள் தலைவர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பங்கேற்ற பெண்கள், ஒரே மாதிரியான உடை அணிந்து நடனம் ஆடினர். இதில், பழனிக்கவுண்டன்புதூர், நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என, 80க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில், வீரபாண்டி பேரூராட்சி முன்னாள் தலைவர் ஜெயராமன், மாவட்ட கவுன்சிலர் கார்த்திக், பன்னிமடை ஊராட்சி தலைவர் ரத்தினம் மருதாசலம், குருடம்பாளையம் ஊராட்சி முன்னாள் தலைவர் மணி, காங்., வட்டார தலைவர் மோகன்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.